திருச்சி- பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமோலாளர் அலுவலக வளாகத்தில் பி எஸ்என் எல் எம்ப்ளாயீஸ் யூனியன் பி.எஸ்.என்.எல். ஓய்வுப்பெற்றோர் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் திருச்சி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மாதந்தோறும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்ற பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஊதிய மாற்ற பிரச்சினையை இணைக்காமல், 15-விழுக்காடு நிர்ணய பலனுடன் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள, ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவ பில்களை கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி பி.எஸ்.என்.எல்.இ.யு. மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையன் ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu