தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10,92,000 அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்

தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10,92,000 அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்
X

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்து 92 ஆயிரத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்க நிர்வாகிகள், முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்கு ரூ 10 லட்சத்து 92 ஆயிரத்தை வழங்கினர்.

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்த்தின் சார்பில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்களை மாநில நிர்வாகிகள் சந்தித்து தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கம் சார்பில் ₹1092000 வழங்கினர். மேலும் சங்கத்தின் முக்கிய 20 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர்.

மனு பெற்று கொண்ட அமைச்சர். கோரிக்கைகளை படித்துவிட்டு அனைத்தும் நிறை வேற்றுவோம் என்று சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

இச்சந்திபில் மாநில தலைவர் பெ.கணேசன், பொதுசெயலாளர்மா கேசவன், .அமைப்பு செயலாளர் கிரிஸ்டோபர்தாஸ், மத்திய மண்டல பொறுப்பாளர்ச.சகுல்அமீது, துணை செயலாளர் ஆர் கிருஷ்ணசாமி, துணைதலைவர் டி.சோமசுந்தரம் மற்றும் கடலூர் துத்துகுடி திண்டுகல் திருச்சி மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்