விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்களை கண்டித்து போராட்டம்

விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்களை கண்டித்து போராட்டம்
X

வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியல் நடந்தது.

திருச்சியை அடுத்த குழுமணி பக்கம் உள்ள பேரூரை சேர்ந்தவர் மருதமுத்து.( வயது 75. )விவசாயி,. இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். மாதம் 3 ஆயிரம் ரூபாய் தவணையாக இந்த கடனுக்கு செலுத்த வேண்டும். கொரோனா பிரச்சினை காரணமாக ஜூலை, ஆகஸ்டு மாத தவணை தொகையை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் குறிப்பிட்ட அந்த வங்கியில் இருந்து ஒரு ஊழியர் மருதமுத்துவின் வீட்டிற்கு வந்து கடன் தவணை தொகையை கேட்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் அந்த வங்கியின் மேலாளரும் அருவறுக்கத்தக்க வகையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது, .

இதனால் மனம் உடைந்த மருதமுத்து வீட்டிற்குள் சென்று தனது மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த வங்கி ஊழியர் வெளியில் காத்திருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் மருதமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல் கூறாய்விற்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் அவரது உறவினர்களும் மருதமுத்து தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என கூறி அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்,

இதனைத்தொடர்ந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்,. இந்த சம்பவம் திருச்சி அரசு மருத்துவமனை அருகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil