திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சி வந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த விசுவநாதன் (வயது 35) என்ற பயணி ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த நவாஸ்கான் (வயது 37) என்பரிடம் சோதனை செய்தபோது ரூ.2.2 லட்சம் மதிப்பிலான ரியால், திருச்சியைச் சேர்ந்த முகமது இசாக் (வயது 27) என்பவரிடம் ரூ.2.34 லட்சம் மதிப்பிலான ரியால் மற்றும் சென்னை புதூரை சேர்ந்த பீர் முகமது (வயது 43) என்பவரிடம் இருந்து ரூ.2.28 லட்சம் மதிப்பிலான ரியாலை வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரியால், இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ 6.82 லட்சம் ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!