திருச்சி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல்

திருச்சி மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 2471 கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அரசுத்துறை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு வரி இல்லாத வருவாயாக ஆண்டுதோறும் ரூ.13கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் குத்தகைதாரர்கள் மட்டும் வாடகைதாரர்கள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை மற்றும் குத்தகை செலுத்தாததால் ரூபாய் 40 கோடி வரை நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை.வாடகைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் அலட்சியம் மற்றும் அரசியல் பின்னணி காரணங்களால் வாடகை பாக்கி நிலுவைத் தொகையை மாநகராட்சியால் வசூல் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வாடகை, குத்தகை நிலுவை தொகை வசூல் செய்வதற்கான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.அந்த அடிப்படையில் பாக்கி வைத்துள்ள தனிநபர் கடைகளை சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து வாடகை மற்றும் குத்தகைதாரர்கள் உடனடியாக ரூ2.35 கோடி நிலுவைத் தொகையை செலுத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்திய பின்பும் வாடகை செலுத்தாத கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.அதில் திருச்சி கிழப் புலிவார் சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!