திருச்சி: வழக்கு தொடர்ந்தவர்களுக்கு காவலர் பணிக்கு மறு உடற்தகுதி தேர்வு

திருச்சி: வழக்கு தொடர்ந்தவர்களுக்கு காவலர் பணிக்கு மறு உடற்தகுதி தேர்வு
X
திருச்சியில் காவலர் பணிக்கான மறு உடற்தகுதி தேர்வு இன்று நடைபெற்றது.
வழக்கு தொடர்ந்தவர்களுக்கு காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் இன்று நடந்தது.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா காரணமாக உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களும், உடற்தகுதி அளவீட்டில் குளறுபடி உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களும் நிலுவையில் இருந்தனர்.

மறு உடல் தகுதி தேர்விற்காக காத்திருந்தவர்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் உடல் தகுதித் தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று மார்பு, உயரம் அளக்க மறு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் 146 ஆண்களும், 29 பெண்கள்,1 திருநங்கை உட்பட 183 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா காரணமாக 113 நபர்களும், உடற்தகுதி தேர்வில் குளறுபடி உள்ளதாக வழக்கு தொடர்ந்து மறு உடல் அளவீட்டிற்காக 111 நபர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு நாளை உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த யாழினி என்ற திருநங்கை கடந்த உடற்தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலின் படி 158.7 உயரம் மட்டுமே இருந்ததால் நிராகரித்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கைகளுக்கு SC/ST -க்கு அளிக்கப்படும் வயது தளர்வை போன்று உயரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி.க்கு வழங்கப்படும் 157 செ.மீ உயர சலுகை திருநங்கைகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் வந்து உடற்தகுதி தேர்வில் யாழினி கலந்து கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!