திருச்சி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து இன்று காலை முதல் தொடக்கம்.

திருச்சி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து இன்று காலை முதல் தொடக்கம்.
X

பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்தபோது எடுத்த படம்.

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. திருச்சி மண்டலத்தில் 80 % சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகள் நேற்று தானியங்கி எந்திரங்கள் மூலம் தூய்மைபடுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.திருச்சி மண்டலத்தில் 945 பேருந்துகள் உள்ள நிலையில், அதில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி 735 பேருந்து இன்று காலை முதல் இயக்கப்படுகிறது.

இதில் 399 பேருந்துகள் மாநகரப் பேருந்துகள் ஆகும். 49 தினங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் சிறப்பு பூஜைக்கு பிறகு பேருந்துகள் பணிமனையில் இருந்து எடுக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரத்தை பொருத்தவரை சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் பேருந்து நிலையம் ஆகிய இரண்டும் முக்கியமான பேருந்து நிலையங்கள் ஆகும். இங்க இருந்து ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி, பெட்டவாய்த்தலை, துவாக்குடி, ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!