திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம்
திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் 14 வகையான மூலிகை மற்றும் கங்கை, காவிரி நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்தியாளரிடம் கூறும்போது முத்தரையர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த அபிஷேகம் நடைபெற்றுள்ளது. தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோர்ட்டு ரவுண்டானா வரை உயர்மட்ட பாலம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. பாலம் வந்தால் முத்தரையர் சிலை அங்கேயே இருக்க வேண்டும். அதை அகற்ற முயன்றால் ஆயிரம் உயிர்கள் பலி கொடுக்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக முதல் அமைச்சரை நேரில் சந்திக்க தயாராக இருக்கிறோம். 1300 வருடத்திற்கு முன்பு ஆண்ட பெரும்பிடுகு மன்னரை நினைவு கூறும் வகையில் 130 அடி உயர சிலையை தமிழக அரசு அமைத்து தரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் மஞ்சள் உடை உடுத்தி காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க திருவிழா போன்று பேரணியாக வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu