திருச்சி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 794 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 766 படுக்கைகள் முழுவதும் நிரப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்,
ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 157 உள்ளது.அதை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 4000 முதல் 5000 மாதிரிகள் எடுக்கப்படுகிறது.மாவட்டத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.ரெம்டெசிவர் மருந்தும் அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவில் தரம் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அது குறித்து டீன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.நோயாளிகளுக்கு எந்த வித அசெளவகரியம் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu