திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது

திருச்சியில்  சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது
X
திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை:அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1226 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 161.43 கோடி மதிப்புள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும்.

மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

Tags

Next Story
future of ai in retail