திருச்சியில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்

திருச்சியில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்
X

திருச்சியில் முதல் அமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்க பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நோய்த்தொற்று உறுப்புகள் செயலிழப்பு, பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை, நுண் துளை கருப்பை அறுவை சிகிச்சை போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் கலெக்டர் நலம் விசாரித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மணப்பாறை அரசு மருத்துவமனை வார்டு மேலாளர் ஜீவா, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வார்டு மேலாளர் சசிகலா, மாருதி மருத்துவமனை மருத்துவக் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிலட்சுமி, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவக் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சிவராசு வழங்கி கௌரவித்தார்.

மேலும் திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வெளியிட்டார். இதில் மருத்துவத் துறை இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, மாவட்ட திட்ட அலுவலர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!