டெல்லி பெண் போலீஸ் கொலை கண்டித்து திருச்சியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி பெண் போலீஸ் கொலை கண்டித்து திருச்சியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

டெல்லி பெண் போலீஸ் ஷாபியா கொலைக்கு நீதி கேட்டு திருச்சியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லி பெண் போலீஸ் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தம் அருகில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நல பாதுகாப்பு குழு தலைவர் வின்சென்ட் முன்னிலை வகித்தார்.

டெல்லியில் பெண் போலீஸ் ஷபியா கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும்,அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகளில் இருந்து பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஷாபியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஷாபியா கொலைக்கு நீதிகேட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்