திருச்சி:ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

திருச்சி:ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் 2   வேட்பு மனுக்கள் தள்ளுபடி
X
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு
திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மனுக்கள் பரிசீலனையின்போது 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி. செய்யப்பட்டன.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஒன்றியத்தில் 10-வது வார்டு, துறையூர் ஒன்றியத்தில் 13-வது வார்டு ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர் பதவி, லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி, புள்ளம்பாடி ஒன்றியம் கீழ அரசூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சி தலைவர் பதவி, பல்வேறு ஊராட்சிகளில் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி என மொத்தம் 24 பதவிகளுக்கான இடை தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் மூன்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 27 பேரும், இரண்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், 19 வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேரும் என மொத்தம் 74 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் வையம்பட்டி ஒன்றியத்தில் 6-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தாக்கல் செய்த ஒருவருடைய மனுவும், துறையூர் ஒன்றியத்தில் 13- வது வார்டில் தாக்கல் செய்த ஒருவருடைய மனுவும் என இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் உள்ள 19, வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு குறிப்பிட்ட ஐந்து வார்டுகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

நாளை சனிக்கிழமை மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும். இந்த தகவலை திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சிவராசு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!