திருச்சி மாவட்டத்தில் கொரோனா பலி அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பலி அதிகரிப்பு
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளது. ஆனாலும் கொரோனா முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று பேர் கொரோனாவுக்குபலியாகி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயிர்ப்பலி எதுவும் இல்லாத நிலையில் இன்று மட்டும் மூவர் பலியாகி இருப்பது மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் நாற்பத்தி ஏழு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு ஆயிரத்து பன்னிரண்டு பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!