திருச்சி மாநகரில் இனி வீடு, வீடாக கொரோனா பரிசோதனை

திருச்சி மாநகரில் இனி வீடு, வீடாக கொரோனா பரிசோதனை
X
திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

வீடுவீடாக சென்று செய்யும் கொரோனா தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சிர மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள நபர்களுக்கு ஆக்ஸிஜன் அளவினை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 795 பணியாளர்கள் மற்றும் 50 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இன்று முதல் தினமும் 100 வீடுகள் வீதம் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒவ்வொரு வீடுவீடாக சென்று மேற்கண்ட பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பரிசோதனையின் போது எவருக்கேனும் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதற்கும் கீழாகவோ அல்லது வெப்பநிலை 37சி அதிகமாகவோ இருந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் பாரசிட்டமல், வைட்டமின்-சி, ஜிங்க், கபசுர குடிநீர் தயாரிக்கும் பாக்கெட் மற்றும் முகக்கவசம் ஆகியவை அடங்கி மருத்துவ தொகுப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்படும்.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக வரும் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future