திருச்சியில் 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
திருச்சியில் 95- அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள பெரியார் சிலைக்கு தடை விதிக்ககோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று மனு ஒன்றை வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் வாழ்நாள் முழுக்க இந்து கடவுள்களை இழிவு படுத்தி, இந்து தெய்வ நம்பிக்கைகளை புண்படுத்தி பிரச்சாரம் செய்தவர் ஈ.வெ.ராமசாமி (பெரியார்). தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வீரமணி அவருடன் ஒட்டிக் கொண்டார். . திருச்சியில் பெரியாருக்கு சிலை அமைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது.
மு.க. ஸ்டாலின் வீட்டிலேயே இறை நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை சீர் குலைக்கும் வண்ணம் பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என அறிவித்திருக்கிறார்கள். படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும், முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்றும் சொன்னவர் ஈ.வெ.ரா, சுதந்திர நாளை கருப்பு கொடி ஏற்றி கொண்டாடியவர் அவர்..
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் அவரது சிலை வைத்தது போல் மீண்டும் செய்ய பார்க்கிறார்கள் என்றார். அப்போது அவருடன் மாநில துணை தலைவர் மாரி, மாநில செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் சந்துரு உள்ளிட்ட பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu