மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி குண்டூர் கிராம மக்கள் போராட்டம்

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து  திருச்சி குண்டூர் கிராம மக்கள் போராட்டம்
X

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து  குண்டூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து குண்டூர் கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதால் மாநகராட்சியை ஒட்டியுள்ள 29 ஊராட்சிகளை இணைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு சில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் அருகே எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டு ஊராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை