திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அமைச்சர் நேரு உதவி
திருச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி வழங்கினார்.
திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்று இரவு மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவலறிந்த திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று காலை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவியை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, மாநகர தி.மு.க. செயலாளர் முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், பகுதி செயலாளர் காஜாமலை விஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu