திருச்சி விழாவில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- அமைச்சர் வழங்கினார்

திருச்சி விழாவில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- அமைச்சர் வழங்கினார்
X

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் நடந்த விழாவில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பதிமூன்று ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினார்.

இந்த விழாவில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, முன்னாள் எம்.எல்..ஏ. சேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கருணாநிதி, மாவட்ட செய்தி துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், உதவி அதிகாரி கார்த்திக் ராஜ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்