திருச்சியில் மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த திருச்சியில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்.
மருத்துவர்கள் தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த அரும்பாடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 42 மருத்துவர்கள், இந்தியா முழுவதும் இதுவரை 1,427 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழக்கும் சூழலில், கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ள மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu