திருச்சியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டின் பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தது

திருச்சி கருமண்டபத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் டாக்டர். யோகேஸ்வரன் (வயது 27) இவர் கடந்த 7-ந்தேதி நண்பரின் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு திருநெல்வேலி சென்றார். மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்தபொழுது முன்பக்க கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் முன்புறம் உள்ள மெயின் கதவின் கொண்டியை உடைத்து, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தரைதளத்தில் படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் பூஜை அறை மேல் வைத்திருந்த மூன்று சூட்கேஸ் வெள்ளி பொருட்களும், முதல் மாடியில் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகளையும் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக யோகேஸ்வரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 18 பவுன் நகை, 3 சூட்கேஸ் வெள்ளி பொருட்கள், ரூ. 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!