திருச்சி: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்திய  அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க. தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர் அலுவலம் முன் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி தலைமை தாங்கினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்தும் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும்,விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மத்திய அரசின் ஜனநாயக மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம் ,மாநகர திமுக பொருளாளர் டோல்கேட்சுப்பரமணி, பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!