முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சியில் சிலிண்டர் டெலிவரி செய்வோர் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சியில் சிலிண்டர் டெலிவரி செய்வோர் அடையாள வேலை நிறுத்த போராட்டம்
X

திருச்சியில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வோர் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி சிலிண்டர் டெலிவரி செய்வோர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலகட்டத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் சிலிண்டர் சப்ளை செய்து வரும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும்,

இதை மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் நிலையை பலமுறை எடுத்துரைக்கும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும்,

21வகை தொழிலாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தபோது, எங்களையும் முன்கள பணியாளராக அறிவிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், உடனடியாக எங்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி திருச்சியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!