நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
X

திருச்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு செல்போன் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மாபெரும் முகாமை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

94 ஆயிரம் இலக்கு என்கிற வகையில் திருச்சியில் மூன்றாவது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக 333 மனநல ஆலோசகர்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவர்களிடம் செல்போன் மூலமாக பேசி கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

20 சதவீதம் மாணவர்கள் செல்போனை எடுக்கவில்லை. அவர்களையும் இன்று முதல் தொடர்புகொண்டு கவுன்சிலின் கொடுக்கப்படும். இது இந்தியாவிலேயே நல்ல நடைமுறையாகும். 56 சதவீதம் முதல் தவணை, 17 சதவிகிதம் இரண்டாவது தவணை தடுப்பூசி தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த வாரம் 28 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!