திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு  கொரோனா தடுப்பூசி
X
திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் பணியாற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி மேற்கு தொகுதியில் பணியாற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மிளகுபாறையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்