திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில்  கண்காணிப்பு அலுவலர்  ஆய்வு
X
உறையூர் மீன் மார்க்கெட் பகுதியில் நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தக்கர் ஆய்வு செய்தார்,

திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரீஸ் தக்கர் இன்று திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் பகுதியில் , ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் சமுக இடைவெளி, முககவசம் ஆகிய கொரோனா விதிமுறைகள் பின்பற்ற படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags

Next Story
ai marketing future