கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு வி.ஏ.ஓ. ஒப்புதல் வழங்க வேண்டும்

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு வி.ஏ.ஓ. ஒப்புதல் வழங்க வேண்டும்
X
திருச்சி மாவட்ட, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மாவட்ட தலைவர் மாலைத்துரை தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கொரானா தொற்று காரணமாக அலுவலக கூட்டம் நடத்துவதை தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறி வருகிறது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைய வழியாக பதிவு செய்தல், புதுப்பத்தலுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியேரிடத்திலிருந்து உத்தரவு வந்தால் மட்டுமே இணைய வழியாக ஒப்புதல் வழங்வோம் என கூறுகின்றனர். இதன் காரணமாக சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது.

தொழிலாளர்களுக்கு வர வேண்டிய நலத்திட உதவிகள் பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் கருதி கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதள வழியாகக் ஒப்புதல் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா