திருச்சியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு

திருச்சியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு
X

விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காலில் வைக்கப்பட்டு உள்ளார்.

உண்ணாவிரதம் இருக்க புறப்பட்ட விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காலில் வைக்கப்பட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தியன்று (நாளை) கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்200 விவசாயிகள் இன்று இரவு 10 மணிக்கு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை திடீரென திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டு முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல விடாமல் தடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவரது வீட்டுகாவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த 10 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக டெல்லி சென்று தமிழக விவசாயிகள் போராடலாம் என்று நினைத்தால் காவல்துறை விவசாயிகளை டெல்லி செல்லவிடாமல் தடுக்கிறது. நாளை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு இன்று செல்லும்போது காவல்துறையால் தடுக்கப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளோம், இது ஜனநாயக நாடா? அல்லது சர்வாதிகார நாடா? விவசாயிகளை வீட்டுக்காவலில் வைப்பதன் மூலம் விவசாயிகள் இந்த நாட்டின் அடிமைகள் என காட்டப்படுகிறது. இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறோம். அதேபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து எங்களுக்கு ஏன் இந்த கொடுமை நடக்கிறது என கேட்க உள்ளோம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!