திருச்சியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில்  அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். இதில் கடந்த 2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியது போல் 2021 ஜூலை 1-ந்தேதி முதல் மாநில அரசு வழங்க வேண்டும். 2015 நவம்பர் முதல் நாள் வரை வழங்க வேண்டிய பஞ்சப்படி நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!