திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம்
திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடந்தது.
திருச்சி அருண் ஓட்டலில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமநாதன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன், திருவாரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரவண சத்யா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் குரு சங்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மதுரை மாவட்ட தலைவர் சக்தி, கரூர் மாவட்ட மகளிரணி தலைவர் அபிராமி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சரவணன், கார்த்திக் மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஆனால் அனைத்து பெருமாள் கோயில்களும் மூடி உள்ள நிலையில் சாராயக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
தமிழகத்தில் பிரிவினைவாதம் ஒழிய சமத்துவபுரம் மற்றும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள ஈவெரா பெரியார் சிலையை அகற்றிவிட்டு அந்த இடங்களில் ராமானுஜர், திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும்.
புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ரவி முன்னாள் காவல்துறை உயரதிகாரி என அவர் பதவி ஏற்கும் முன்பே எதிர்ப்பு தெரிவிக்கும் திருமாவளவன், கே.எஸ்.அழகிரி இவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். திருடனுக்கு தான் காவல்துறை அதிகாரியை கண்டால் அச்சம் ஏற்படும்.
பஞ்சாபின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றவுடன் பஞ்சாப் முதல்வர் ராஜினாமா செய்து உள்ளார். அதே செய்தி தமிழ்நாட்டிலும் வரும். தமிழகத்தில் இந்து ஓட்டுவங்கி உருவாகிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu