திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் தங்குவதற்கு விடுதி வசதி

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் தங்குவதற்கு விடுதி வசதி
X

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விடுதி.

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான விடுதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி புத்தூரில் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள இம் மருத்துவமனையில் தினமும் சுமார் 5 ஆயிரம் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுடன் அவர்களது உறவினர்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்வது வழக்கம். அப்படி கவனித்துக் கொள்பவர்கள் மருத்துவமனை கட்டிடத்தின் தாழ்வாரங்களிலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியிலும் இதுவரை இரவு நேரங்களில் படுத்து வந்தனர்.

இதனால் நோயாளிகளின் உறவினர்கள் படும் அவதியை அறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்பட்டது.இந்த விடுதியில் ஆண்களுக்கு 28 படுக்கைகளும், பெண்களுக்கு 20 படுக்கைகளும் தனித்தனியாக உள்ளன.

இந்த விடுதியில் தங்குபவர்கள் ஆதார் கார்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதற்கான சீட்டு ஆகியவற்றை காண்பித்து தங்கிக்கொள்ளலாம். இந்த விடுதி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு மருத்துவமனை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!