திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
பைல் படம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் படி திருச்சி மாவட்டத்தில் நேற்று மாநகர் பகுதியில் 126 இடங்களிலும், புறநகர் பகுதியில் 505 இடங்களிலும் என மொத்தம் 631 இடங்களில் கொரோனா மாபெரும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த முகாம்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொய்வின்றி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அருங்காட்சியக இயக்குனருமான எஸ். வி. ராமன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் மாவட்ட கலெக்டர் சிவராசு கூறுகையில் 'திருச்சி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது .இதன் மூலம் தமிழக அளவில் ஒரே நாளில் அதிக அளவில் ஊசி போட்ட சுகாதார மாவட்டங்கள் பட்டியலில் 4-ம் இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்து சாதனை படைத்து உள்ளது' என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu