/* */

திருச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் போட்டி

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24 பதவிகளுக்கு 74 பேர் போட்டி
X

திருச்சி மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு குழு உறுப்பினர் பதவிக்கும், 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 24 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். நேற்றுவரை இந்த 24 பதவிகளுக்கும் 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான இன்று வேட்புமனுத்தாக்கல் கடும் விறு விறுப்பு ஏற்பட்டது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 13, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டு க்கும் நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று மட்டும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 Sep 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  7. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  10. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!