திருச்சி மாவட்ட குறைதீரக்கும் நாள் கூட்டத்தில் 526 மனுக்கள்

திருச்சி மாவட்ட குறைதீரக்கும் நாள் கூட்டத்தில் 526 மனுக்கள்
X
கலெக்டர் சிவராசு
திருச்சி மாவட்டத்தில் நடந்த குறைதீரக்கும் கூட்டத்தில் 526 மனுக்கள் பெறப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மற்றும் மனுப் பெட்டி மூலம் 526 மனுக்கள் பெறப்பட்டது.

இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும், நிலம் தொடர்பான 126 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 18 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 96 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ்வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 31 மனுக்களும், புகார் தொடர்பாக 42 மனுக்களும் பெறப்பட்டன.

கல்வி உதவித் தொகை வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 37 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி தொடர்பாக 16 மனுக்களும், பென்சன், நிலுவைத் தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள் 09 -ம், 151 இதர மனுக்களும் என மொத்தம் 526 மனுக்கள் பெறப்பட்டது என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!