திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை

திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை
X
திருச்சி கருமண்டபம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிருவருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் 4 வது தெருவில் முஹம்மது ஜயீத் என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் திருச்சிக்கு வந்தார். இந்நிலையில் தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அழைத்து கொண்டு பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவை உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

பின்னர் திருச்சி கண்டோண்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சோதனைச் செய்தனர். கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!