திருச்சி: 10 தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்

திருச்சி: 10 தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சியில் 10 தாசில்தார்களை திடீர் என பணியிட மாறுதல் கலெக்டர் சிவராசு உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பத்து தாசில்தார்கள் திடீர் என இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இரட்டை வழி அகல ரயில் பாதை (விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை) அலகு நிலம் எடுப்பு தனி தாசில்தார் சண்முகப்பிரியா முசிறி தாசில்தார் ஆகவும், துறையூர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனி தாசில்தார் சேக்கிழார் மணப்பாறை தாசில்தார் ஆகவும், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் கீதாராணி மருங்காபுரி தாசில்தாரர் ஆகவும், முசிறி தாசில்தார் சந்திரதேவநாதன் முசிறி உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், முசிறி உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார் துறையூர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனி தாசில்தார் ஆகவும், மணப்பாறை தாசில்தார் லஜபதிராஜ் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தாரராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மருங்காபுரி தாசில்தார் ஜெயப்பிரகாசம் இரட்டை வழி அகல ரயில் பாதை (விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை) அலகு 2 தனி தாசில்தாரராகவும், திருச்சி தாசில்தார் மகாலட்சுமி (விடுப்பு முடிந்து மீண்டும் பணியிடம் ) தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டம் திருச்சி தனி தாசில்தாரராகவும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சி தனி தாசில்தார் பன்னீர்செல்வம் காலியாக உள்ள லால்குடி (சமூக பாதுகாப்பு திட்டம்) தனி தாசில்தாரராகவும் இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்