எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர் சிவராசு தகவல்

எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர் சிவராசு தகவல்
X

பைல் படம்

எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணைய வழியாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி ( STATE BANK OF INDIA ) - ன் பல்வேறு பணிக் காலியிட அறிவிப்புகள் விளம்பர அறிவிப்பு 676001 : CRPD / CR / 2021-22 / 09-601 வாயிலாக வெளியிடப்பட்டது.

இப்பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வழியாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 22.05.2021 முதல் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இலவச பயிற்சி வகுப்பு சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் உருவாக்கப்பட்ட sbiemptrichy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் .

அவ்வாறு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேற்காணும் மின்னஞ்சலுக்கு தாங்கள் SBI பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், கைபேசி எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற தகவல்களை அளித்து இவ்விணையதள இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!