முழு ஊரடங்கு காலத்திலும் விறு விறுப்பாக தயாராகும் புதிய சத்திரம் பேருந்து நிலையம்

முழு ஊரடங்கு காலத்திலும்  விறு விறுப்பாக தயாராகும் புதிய சத்திரம் பேருந்து நிலையம்
X
திருச்சி மாநகரின் அடையாளமாக புனரமைக்கும் பணி

திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கக் கூடிய சத்திரம் பேருந்து நிலையத்தை ரூ.17.34 கோடியில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இதற்கான பணிகளை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, பொலிவுறு நகரத் திட்ட குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டது. திட்ட மாதிரியைப் பாா்வையிட்ட இக் குழுவினா் ஒப்புதல் அளித்து பணிகளைத் தொடங்க அறிவுறுத்தினா். இதன்படி, ரூ.17.34 கோடியும் ஒதுக்கப்பட்டது.

திருச்சியில் முழு முடக்கம் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது. பொதுமக்கள் ஊராடங்கை மீறி வெளியே செல்லும் நிலையும் காணமுடிகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நிலையிலும் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.

பேருந்து பயணிகள் நிற்க தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்படும். இந்தப் பகுதியில் பேருந்துகள் செல்லும் இடம் குறித்த அறிவிப்புப் பலகை, குடிநீா் வசதி, மின் விளக்கு வசதியும் உள்ளது. புனரமைப்பு பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.

#Trichy #முழுஊரடங்கு #திருச்சி #பேருந்துநிலையம். # கொரானா #ஊரடங்கு #இன்ஸ்டா செய்தி #இன்ஸ்டாநியூஸ் #Instanews #busstand #lockdown #covid19


Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil