திருச்சி சந்தானம் வித்யாலயாவில் இளம் சிலம்ப சாதனையாளர்களுக்கு பாராட்டு
திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் இளம் சிலம்ப மாணவி ஒருவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இளம் சாதனையாளர் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலர் முனைவர் கோ. மீனா தலைமை தாங்கினார்.
இதில் திருச்சி ஆசான் குமரேசன் சிலம்ப விளையாட்டு அகாடமி நிறுவன இயக்குநர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், மற்றும் இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர்கள் ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், மான்கொம்பு, சக்கரபாணம், கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தித் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பள்ளியின் முதல்வர் முனைவர் பொற்செல்வி வரவேற்றார். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், சிலம்பம் குறித்துப் பேசுகையில், அழிந்து வரும் சிலம்பக் கலைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் ஆசான் குமரேசனையும் அவரது தந்தை வழியில் பணியாற்றும் நித்திஷ் குமாரையும் பாராட்டினார்.25 நிமிடத்தில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய மாணாக்கர்களையும் வாழ்த்தினார்.
மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் (3,000 வீரர்களுக்கு மாதம் 10,000 வழங்குகிறது) பற்றியும் எடுத்துரைத்தார். சிலம்பம் சுற்றுவதால் உடலிலுள்ள ஏழு சக்கரங்கள் செயல்படுகிறது. உடல் வலிமை பெறுகிறது என்று குறிப்பிட்டார்.முடிவில் மூத்த முதல்வர் பத்மா சீனிவாசன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu