திருச்சி மலைக்கோட்டை கோயில்-அமைச்சர் நிகழ்ச்சி ரத்தானதால் பரபரப்பு
இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்சி சமயபுரம் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் கோயில் , மலைக்கோட்டை கோயில் யானை பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி அலங்காரம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலை துறை அமைச்சரை நேரில் சந்தித்து அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ராணி மங்கம்மாள் சொந்தமான இடத்தை கார்மல் சர்ச் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை மீட்கக்கோரி மனு அளிக்க காத்து இருந்தனர் . மலைக்கோட்டை கோயில் சார்பிலும் நாகநாதசுவாமி கோவில் அருகில் அமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் அமைச்சர் சேகர்பாபு திருவானைக்காவல், சமயபுரம் கோயில்களை ஆய்வு செய்து விட்டு மலைக்கோட்டை கோயில் ஆய்விற்கு வரவில்லை. இதனால் யானை லட்சுமி அங்கிருந்து அது தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. மனு கொடுப்பதற்காக காத்திருந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தரப்பில் அமைச்சர் விமானத்தில் செல்ல நேரம் ஆனதால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu