திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும்:திருச்சி எம்.பி.
''திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும்,'' என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் ஷர்மாவை டெல்லியில் நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
''திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும்,'' என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் ஷர்மாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது கடிதம் ஒன்றை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வழங்கினார். அதில், தெரிவித்திருப்பதாவது:
காரைக்குடி – அறந்தாங்கி – பேராவூரணி – பட்டுக்கோட்டை – அதிராமபட்டினம் - முத்துப்பேட்டை –திருத்துரைப்பூண்டி - திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதை சுமார் 1,000 கோடி அளவில் பணம் செலவு செய்து பணிகள் நிறைவுற்று ஓராண்டுக்கும் மேலாகியும் இன்னும் தேவையான கேட் கீப்பர்களை நியமித்து பொது மக்கள் பயன் பெறும் வகையில் ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும்.
திருச்சியில் இருந்து பெங்களுருக்கு பகலில் துரித ரயில் சேவை துவங்கப்பட வேண்டும். திருச்சியில் இருந்து கீரனூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களும் பொது மக்கள் நலன் கருதி கீரனூரில் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எம்.பி. திருநாவுகரசர் தெரிவித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu