திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. உள்பட 154 பேர் கைது

திருச்சியில்  சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. உள்பட 154 பேர் கைது
X

திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி. உள்பட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி, உட்பட 154 காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச்சென்ற அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை தடுத்து போலீசார் கைது செய்தனர்.

அவரை கைது செய்த உ.பி. பா.ஜ.க.அரசையும், மத்திய அரசையும்,காவல்துறையயும் கண்டித்தும், உடனடியாக பிரியங்கா காந்தியை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரூர் எம்.பி,ஜோதிமணி தலைமையில் திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மெயின்கார்டுகேட் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த சாலைமறியலில் ஏராளமான காங்கிரஸ்கட்சியினர் பங்கேற்றனர். பிரியங்காகாந்தியை விடுதலை செய்யவேண்டும். விவசாயிகளை கொலை செய்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களைஎழுப்பினர்.

இந்த சாலை மறியல்போராட்டத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் (மாநகர்) ஜவஹர், (தெற்கு)கோவிந்தராஜ், (வடக்கு) கலை, பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மேயர் சுஜாதா, மாநிலபொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்துசாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி,ஜோதிமணி உள்ளிட்ட நூற்று ஐம்பத்தி நான்கு காங்கிரஸ் கட்சியினரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!