திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள்  கொரோனா நிவாரண நிதி வழங்கல்
X

திருச்சி மத்திய சிறை (பைல் படம்)

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் ஒருநாள் உணவு படியினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

திருச்சி சிறையில் உள்ள வெளிநாட்டினர் பட்டினி கிடந்து நிதி வழங்கினர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, தெற்கு சூடான், கனடாவை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் உணவு படியினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளர் ரவி முன்னிலையில், உதவி கலெக்டர் ஜமுனாராணியிடம் 18 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!