திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக இருவரிடம் விசாரணை நடக்கிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இரண்டு பயணிகள் தங்களது காலனியில் மறைத்து கொண்டு வந்த சுமார் 603 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ .29 லட்சம் இருக்கும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து தங்கம் கடத்தியவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் 4 கிலோ தங்கம் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் தங்கம் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு