திருச்சி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி  விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
X
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கம், பேஸ்ட் வடிவத்தில் 555 கிராம் எடையுள்ள ரூ.26.29 லட்சம் மதிப்பில் இருந்தது கைப்பற்றப்பட்டது. அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியின் ஆசனவாயில் மறைக்கப்பட்ட 697 கிராம் எடையுள்ள ரூ.33 லட்சம் மதிப்புள்ளதை மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

பயணிகள் இருவரும் சுங்க சட்டம் 1962-கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சல்லடை போட்டு சலித்தும், அவ்வப்போது இது போல பயணிகள் தங்கம் கடத்தி வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business