திருச்சி விமான நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு

திருச்சி விமான நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர்  திடீர் ஆய்வு
X

திருச்சி விமான நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு  செய்தார்.

திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ஜி. கார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரின் பாதுகாப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விமான நிலையம் வந்தார். அவரை திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் வருகை மற்றும் புறப்பாடு, சோதனை வழி, பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்யும் கருவி, பார்வையாளர்கள் கூடம்,

விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், விமானங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் கண்ட்ரோல் ரூம் ஆகியவற்றின் பாதுகாப்புகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல், பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் விமான நியை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai future project