ஊரடங்கிலும் திருச்சி அண்ணா சிலையில் வாகன நெரிசல்

ஊரடங்கிலும்  திருச்சி அண்ணா சிலையில் வாகன நெரிசல்
X
திருச்சி அண்ணாசிலையில் ஊரடங்கு காலகட்டத்திலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

கொரோனா பரவலைத் தடுத்திடும் வகையில் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில தளா்வுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோா், மருத்துவமனை, மருந்தகங்கள், அரசின் அத்தியாவசிய துறைகளில் பணிபுரிவோா், முன்களப் பணியாளா்கள், சுகாதாரத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பணியாளா்கள் தங்களது பணி நிமித்தம் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல, விவசாயிகள் தங்களது சாகுபடி பணிகளுக்காக செல்வதற்கும் வாகனப் பயணம் அனுமதிக்கப்படுகிறது. வங்கி ஊழியா்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, காய்கனிகள், மளிகை, அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை கடைகளும் நண்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பாா்சல் வாங்குவோா்,ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்வோரும் வாகனங்களில் செல்ல அனுமதிகப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாலைகளில் எங்கும் வாகனங்கள் செல்வதைத் தவிா்க்க முடியாமல் போகிறது.அதிகாலை தொடங்கி பிற்பகல் 2 மணி வரையிலும் வாகனங்கள் நெரிசலாக செல்வதைக் காண முடிகிறது.

பல இடங்களில் வாகன நெரிசலும் தவிா்க்க முடியாமல் போகிறது. குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை ரவுண்டானாவில் வாகனங்கள் சாதாரண நாட்களை போல செல்கிறது. போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் போகிறது.

மாநகரக்குள் நுழையும் அனைத்து சோதனைச் சாவடி பகுதிகளிலும் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது.இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கனரக வாகனங்கள் பலவும் கட்டுப்பாடுகளை மீறி வருகின்றன.

Tags

Next Story
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல் தொடக்கம் !