திருச்சியில் கொரோனா நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது

திருச்சியில் கொரோனா நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது
X
திருச்சியில் கொரோனா நிவாரணம் ரூ 2000 வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் துவங்கியது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக வெற்றி பெற்ற பிறகு குடும்ப ஆட்டைதாரர்களுக்கு கொரோன நிவாரணமாக 4000 வழங்கப்படும் என அறிவித்தார் . திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் உடனடியாக 4000 ரூபாயை இரண்டு தவனையாக வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையொட்டி திருச்சி மாவட்டத்திலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரணம் முதல் தவணைத்ததொகை ரூபாய் 2000 வழங்குவதற்காக டோக்கன் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

இதனால் திருச்சியில் 806198 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைய உள்ளனர். மேலும், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!