திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில் 241 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில்  241 சுற்றுகளாக  வாக்கு எண்ணிக்கை
X
திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை 241 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.

திருச்சியில் உள்ள 9 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி 3,292 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடைபெற்றது.வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவுஎந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதி வாக்கு பதிவு எந்திரங்கள் ஜமால் முகமது கல்லுாரியிலும், திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் சாரநாதன் பொறியியல் கல்லுாரியிலும், துறையூர், முசிறி வாக்கு பதிவு எந்திரங்கள் துறையூர் இமயம் கல்லுாரியிலும், மண்ணச்சநல்லுார், லால்குடி சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 டேபிள்கள் போடப்பட்டு உள்ளது. மணப்பாறை 30 சுற்றுகள், ஸ்ரீரங்கம் 32 சுற்றுகள், திருச்சி மேற்கு 28 சுற்றுகள், திருச்சி கிழக்கு 27 சுற்றுகள், திருவெறும்பூர் 30 சுற்றுகள், லால்குடி 22 சுற்றுகள், மண்ணச்சநல்லுார் 25 சுற்றுகள், முசிறி 24 சுற்றுகள், துறையூர் 23 சுற்றுகள் என மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகள் நடைபெறவுள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil