விதிகளை மீறி திறந்த கடைகளை மூடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.

விதிகளை மீறி திறந்த கடைகளை மூடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.
X
திருச்சியில் விதியை மீறி திறந்த கடைகளை காவல் துறையினர் மூடும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 12 மணி அளவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் ஒரு சில கடைகள் சரியாக மூடப்படாமல் இருந்ததால், காந்தி மார்க்கெட்டுக்குள் சென்ற காவல்துறையினர் மூடாமல் இருந்த கடைகளை உடனடியாக மூடுமாறும், தார்ப்பாய்களை கழற்றியும், கடைகளை மூட உத்தரவிட்டனர்.காவல்துறையினர் வருவதற்குள் கடைகளை மூட வேண்டும் என வியாபாரிகளும் வேகவேகமாக கடைகளை அடைத்தனர்.

இதனால் காந்தி மார்க்கெட் கடைவீதி பகுதியில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. எனினும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டன. மக்கள் சிலர் 12 மணி அளவில் காய்கறிகளை வாங்க காந்தி மார்க்கெட்டுக்கு வந்த போது காந்தி மார்க்கெட் கதவு மூடப்பட்டதால் திரும்பி சென்றனர்.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் காந்தி மார்க்கெட் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.ஏற்கனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நாளை மதியம் வரை மட்டுமே காந்தி மார்க்கெட் செயல்படும் என்றும், தற்காலிக மார்க்கெட் ஜி கார்னர் பகுதியில் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்